உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணம் முன்னர் 32 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது என கூறினார்.
இருப்பினும் சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில் இது 52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஒரு கலனுக்கு 81 ரூபாய் இழப்பு ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எதிர்வரும் அடுத்த வாரத்திற்குள் மீளமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.