ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், விமல் வீரவன்சவின் கட்சியினைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், உதய கம்மன்பிலவும் குறித்த கூட்டத்தை புறக்கணித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.