ரஷ்யாவுடனான போர் நெருக்கடிக்கு மத்தியில் 24 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் தங்கியிருப்பதாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அங்கிருந்து இதுவரை 64 இலங்கையர்கள் வெளியேற முடிந்துள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் மொஹமட் ஹசன் தெரிவித்துள்ளார்.
வெளியேற விருப்பமில்லாமல் 27 இலங்கையர்கள் உக்ரேனில் தொடர்ந்து தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு உதவி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பெலாரஸில் வசிக்கும் 1,561 இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையாக மொஸ்கோ மிஷனில் 24/7 ஹொட்லைன் சேவை நிறுவப்பட்டுள்ளது.