20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (திங்கட்கிழமை) இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசல் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்தபோதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமானது.
கப்பலில் 38 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.