எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என கூறினார்.
இலங்கையின் இருப்புக்களை தவறாக நிர்வகித்தல் மற்றும் ரூபாயின் மீதான கட்டாயக் கட்டுப்பாடு ஆகியவை எரிபொருள் விலை உயர்வு உட்பட தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்றார்.
முன்னதாக விலை அதிகரிக்கப்பட்ட போது பதவி விலகுமாறு கூறிய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட போது வாய்மூடி மௌனமாக இருப்பதாக உதய கம்மன்பில சாடினார்.