விமான எரிபொருளின் விலை நேற்று (புதன்கிழமை) முதல் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் விலை டெல்லியில் கிலோ லிட்டருக்கு 17,135.63 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டு, 1,10,666.29 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
விமான நிறுவனங்கள் 40 சதவீதம் வரை எரிபொருளுக்காக செலவிடுகின்ற நிலையில், விமான கண்டனங்கள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நடப்பாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது இது ஆறாவது முறையாகும். அதேநேரம் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு 1 இலட்சத்தை கடந்துள்ளமை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.