வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் நேற்று (புதன்கிழமை) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 57 கிலோமீட்டர் (35.4 மைல்) ஆழத்தில் 23:36 மணிக்கு ஏற்பட்டது என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் வடகிழக்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கு ஒரு மீட்டர் (3.3 அடி) சுனாமி அலைகளுக்கான ஆலோசனையை வழங்கியது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மில்லியன் வீடுகளுக்கு தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உள்ளூர் மின்சார வழங்குநர்கள், டோக்கியோவில் சுமார் 700,000 வீடுகள் மற்றும் ஜப்பானின் வடகிழக்கில் 156,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலும் பல வீடுகளுக்கு தற்போது விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், புகுஷிமா நகருக்கு வடக்கே புல்லட் ரயில் ஒன்றும் நிலநடுக்கத்தால் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.