பதவி துறப்பு கடிதத்தை எழுதுவதற்கு ஒருநிமிடம்கூட செல்லாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கடன் கிடைக்கும். அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல், சுகாதாரம், கல்வி கல்வி துறைக்கான ஒதுக்கீடுகளை குறைத்தல், விலைத்தளம்பல் உள்ளிட்ட நிபந்தனைகள் பயங்கரமானவை.
அப்படியான நிபந்தனைகளை ஏற்கும் அரசியல் அங்கம் வகிக்கமாட்டினேன். பதவி துறப்பு கடிதத்தை எழுதுவதற்கு ஒருநிமிடம்கூட செல்லாது.
பஸில் ராஜபக்சவுக்கு நாம் எதிர்ப்பு. அவர் வசமே ஆளும் கட்சி உள்ளது. எனவே, பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
எதிரணி கொண்டுவந்தால்கூட அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.