புகையிரத சேவையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கை மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஊகத்தின் அடிப்படையில் ரயில்வே தனியார் மயமாக்கப்படவுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரயில்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், என்ஜின்கள், சமிக்ஞை அமைப்புகள் அனைத்தும் ரயில்வேக்குச் சொந்தமானதாகவுள்ளன.
எனவே ரயில்வேயை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. அத்துடன் சரக்கு ரயில் வழித்தடங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.