உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1,000 முதல் 1,200 பேர் வரை இந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்ததாக, துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,400பேர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது.
நகருக்குள் சுமார் 300,000 குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளனர். அங்கு நீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய துருப்புக்கள் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்காததால், உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்துள்ளது.