பீஜிங்கில் நடைபெற்ற 13ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் ஐந்தாவது அமர்வின் தொடக்கக்கூட்டத்தில் சீனப் பிரதமர் லீ கெஹியாங் அரசாங்கப் பணி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் மூலமாக, 2022இல் சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த தேவைகள் மற்றும் கொள்கை நோக்குநிலையை அறிமுகப்படுத்தினார்.
குறித்த அறிக்கையில், பிரதமர் 2021ஆம் ஆண்டு அரசாங்கப் பணிகளை மதிப்பாய்வு செய்து, சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் சிக்கலான மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நாடு மீண்டும் முன்னேறுவதற்கு, கடினமாக உழைத்ததாகவும், கடந்த ஆண்டில் அத்துடன் பல அபாயங்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து வளர்ச்சியில் புதிய மற்றும் சாதனைகளை அடைந்ததாகவும் கூறினார்.
‘எங்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், எங்களுக்கு முன்னால் உள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்,’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஊடகமான, ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, 2022ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சிக்கான இலக்குகள் அரசாங்கப் பணி அறிக்கையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.5சதவீதமக காணப்படுகின்றது.
11 மில்லியனுக்கும் அதிகமான புதிய நகர்ப்புற வேலைகள் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 3 சதவீதம் அதிகரிப்பு ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை 2022ஆம் ஆண்டிற்கான முக்கிய பணிகளை பட்டியலிட்டுள்ளது. இதில் நிலையான மக்ரோ பொருளாதார செயல்திறனை அடைதல், வேலை பாதுகாப்பை பராமரித்தல், சீர்திருத்தங்களை ஆழமாக்குதல் மற்றும் உயர் மட்ட திறப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
2022 இல் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான வரைவு திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய அறிக்கையை மதிப்பாய்வு செய்தனர் 2021ஆம் ஆண்டிற்கான மத்திய மற்றும் உள்ளுர் வரவு, செலவுத்திட்டம் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான மத்திய மற்றும் உள்ளுர் வரவு செலவுத்திட்டத்தின் வரைவு மற்றும் அறிக்கை, ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ கெஹியாங், வாங் யாங், வாங் ஹுனிங், ஜாவோ லெஜி, ஹான் ஜெங் மற்றும் வாங் கிஷான் ஆகியோர் 13ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின ஐந்தாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வருடாந்திர அமர்வில், நிலைக்குழுவின் துணைத் தலைவரான வாங் சென், உள்ளுர் மக்கள் காங்கிரஸ் மற்றும் உள்ளுர் மக்கள் அரசாங்கங்களின் ஆர்கானிக் சட்டத்திற்கான வரைவு திருத்தத்தை விளக்கினார், இது தேசிய சட்டமியற்றுபவர்களுக்கு மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்தல் குறித்த வரைவு முடிவு குறித்தும் வாங் விளக்க உரையை நிகழ்த்தினார்.
அரசியலமைப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்களின்படி, தற்போதைய 13ஆவது தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள் மார்ச் 2023 இல் தங்கள் பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பு, 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் தேர்தல் ஜனவரி 2023இல் நிறைவடையும் என்றும் வாங் கூறினார்.