இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின் புதிய உயர்த் தலைவரராக அவரது 56 வயதான மூத்த மகனான மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொமெய்னியின் தந்தையை அடக்கம் செய்த நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
கொமெய்னியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மஷாத்துக்கு கொண்டு செல்வதற்கு முன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகை கூடத்தில் (Grand Imam Khomeini Prayer Hall) ஒரு பிரமாண்ட பொது விடைபெறும் நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச் சடங்குகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இருந்தபோதிலும் இரகசியமாகவே அவற்றை அரசு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் தெஹ்ரானின் நடுப்பகுதிகளில் ஏற்கனவே பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்டார்.
அவரது மறைவையொட்டி, ஏற்கனவே ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினமும் 07 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












