திபெத் எழுச்சி தினமான மார்ச் 10ஆம் திகதியினைக் குறிக்கும் வகையில் திபெத்தில் சீன அட்டூழியங்களுக்கு எதிராக நேபாள மக்கள் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்தனர்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிஜூலி பஜார் வழியாக பாபர்மஹாலுக்கு நடந்து சென்ற போராட்டக்காரர்கள், திபெத்தில் சீன அட்டூழியங்களை கண்டித்து சுவரொட்டிகளை ஏந்தியபடி சென்றனர்.
உலகெங்கிலும் உள்ள திபெத்திய மக்களுக்கு மார்ச் 10 மிக முக்கியமான நாளாகும்.
1959ஆம் ஆண்டு இதே நாளில்தான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் தாய்நாட்டை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததை எதிர்த்து திபெத்தியர்கள் கிளர்ச்சி செய்தனர்.
1959இல் திபெத்திய எழுச்சியானது தலைநகர் லாசாவில் சீனர்களுக்கு எதிரான அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஒரு தன்னிச்சையான செயலாகத் தொடங்கியது, இது பின்னர் வன்முறையாக மாறியது, இதில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.