சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவது என்பது அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மக்களின் நெருக்கடி நிலைக்கான தீர்வுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
சிலர் மாநாட்டில் பங்கேற்பதாகக் கூறியுள்ள நிலையில், ஒருசிலர் தமது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் மக்கள் சுமையில் இருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டு மென்றும் அழைப்பு விடுத்தார்.