இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளனர்.
இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விக்டோரியா நுலாண்ட் உள்ளிட்ட குழுவினர், வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளனர்.
இதனிடையே, கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்து வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திப்பார் விக்டோரியா நுலாண்ட் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.