• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Anoj by Anoj
2022/03/24
in உலகம்
80 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக மாநில ஊடகங்கள் கூறுகின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் விமானத்தில் இருந்த 132 பேரில் எவரும் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

கடந்த திங்கட்கிழமை தெற்கு சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஆனால் காக்பிட் குரல் ரெக்கார்டரை (கருப்புப் பெட்டி) மீட்டெடுப்பது விபத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

கடினமான சூழ்நிலையில் முக்கியமான கருப்புப் பெட்டிகளில் முதல் ஒன்றை நேற்று (புதன்கிழமை) தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன.

ஆனால், கருப்புப் பெட்டி வெளிப்புறத்தில் சேதமடைந்து காணப்பட்டது. எனினும், அதன் உள் பதிவுகள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தரவுகளை ஆய்வு செய்வதற்காக இது பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கனமழையால் வுஜோவில் விபத்து நடந்த இடத்தின் செங்குத்தான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முயற்சிகளை கடினமாக்குகிறது.

நேற்று விமானத்தில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர். அவர்கள் அங்கு கண்ணீருடன் காணப்பட்டனர்.

ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்த துயர சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணைக்கு விரைவாக உத்தரவிட்டார். துணைப் பிரதமர் லியு ஹி மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை குவாங்சி மாகாணத்தில் உள்ள கிராமப்புற மலைப்பகுதிக்கு அனுப்பினார்.

குன்மிங்கில் இருந்து குவாங்ஜோ விமான நிலையத்துக்கு அந்நாட்டு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பகல் 1.10 மணிக்கு பயணித்த போயிங் 737 ரக விமானம், ஹூஜோ நகரத்தில் உள்ள டெங்ஷியானில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிடத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குளான சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132பேர் இருந்தனர்.

Related

Tags: கருப்புப் பெட்டிசீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துமனித எச்சங்கள்மீட்புக் குழுக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

Next Post

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post
கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.