ஐ.பி.எல். ரி-20 தொடரில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் காலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லலித் யாதவ் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், பெசில் தம்பி 3 விக்கெட்டுகளையும் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் டைமல் மில்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.
——————————————————————————————————————————————————————————–
இப்போட்டியைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 88 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷர்ஸ்தீப் சிங் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் தலா 43 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஆகாஷ் டீப், வனிந்து ஹசரங்க மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஓடியன் ஸ்;மித் தெரிவுசெய்யப்பட்டார்.