தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
அரச செலவினத்தில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் செலவினங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சர்வ கட்சி மாநாட்டில் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து பேசப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.