கிவ் நகரின் மீது இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையினையும் அவர் விமர்சித்துள்ளார்.
சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது படைகளை இடம் மாற்றும் உத்தியே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனின் ஏனைய பகுதிகளில் கடுமையான மோதல்களை இனி உலகம் காணப் போகிறது எனவும் ஜான் கிர்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.