பாகிஸ்தானில் தலைமையிலான இம்ரான்கான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவினை MQM கட்சி விலக்கிக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைவடைந்துள்ளது.
MQM கட்சியின் குறித்த அறிவிப்பினால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது.