இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 – 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்
2021 ஜனவரிக்குள் 139,000 மெட்ரிக்தொன் எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2022 ஜனவரியில் எரிபொருளின் பயன்பாடு 198,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறான பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் விஜேசிங்க, அவ்வாறு அதிகரிப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.