டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் கிடைக்காததால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இலைகளை தொழிற்சாலை கிரைண்டர்களில் போட்டு ஒரே நேரத்தில் அரைக்க வேண்டும்.
எனினும், அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் தங்களது பணிக்கு இடையூறு ஏற்படுவதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருளை விஷேட முறையின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.