இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த சம்பவங்களினால், மொத்தமாக 11பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய அரேபியர்களின் தாக்குதல்களில் 6பேர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்தனர்.
துப்பாக்கிதாரி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது என பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்தார்.