தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.