உக்ரைனுக்கு வடக்கே உள்ள ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது இரண்டு உக்ரைனிய ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள பெல்கோரோடில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே தீப்பிடித்ததைக் காட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இதன் சில காணொளிகள் எண்ணெய் கிடங்கில் ரொக்கெட்டுகள் தாக்குவதைக் காட்டுகின்றன.
ஆளுனர் வெளியிட்டுள்ள வியாசெஸ்லாவ் கிளாட்கோவின் வெளியிட்ட செய்தியில், ‘இரண்டு உக்ரைனிய இராணுவ ஹெலிகொப்டர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்கில் தீ ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை’ என கூறினார்.
மேலும், அவசரகால பணியாளர்கள் முடிந்தவரை விரைவாக தீயை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், குடியிருப்பாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த தீ பரவல் காணொளியை அவசரகால அமைச்சகம் டெலிகிராமில் வெளியிட்டது.
அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், டிப்போவில் (இந்த டிப்போவை ரஷ்ய அரச எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட் நடத்துகிறது) இரண்டு பேர் காயமடைந்ததாகவும் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எட்டு எரிபொருள் தொட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 29ஆம் திகதி பெல்கொரோட் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் பல வெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உக்ரைன் இதற்கு முன்னர் ரஷ்யாவில் இலக்குகளைத் தாக்கவில்லை மற்றும் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவின் குற்றச்சாட்டை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
பெல்கோரோட், 370,000 மக்கள் வசிக்கும் நகரம், உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ் நகருக்கு வடக்கே அமைந்துள்ளது.
இது ரஷ்ய பீரங்கிகளால் அதிக அளவில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் ரஷ்ய படைகளால் சூழப்பட்டுள்ளது.