இந்தியா முழுவதும் அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை 10.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இது குறித்த அறிவித்தலை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதனால் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.