சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையினை அண்மையில் முன்வைத்திருந்தது.
இது, குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோரியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.