இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒருதொகை அரிசி அடுத்தவாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
வர்த்தகத்துறை அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதலாவது கட்ட அரிசி தொகை இவ்வாறு நாட்டை வந்தடையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் மெற்றிக் தொன் அளவான நாடு, சம்பா, வெள்ளை அரிசி ஆகிய அரிசி வகைகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.
அவற்றை உடனடியாக மக்களுக்கு சலுகை விலையில், விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது