அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அரசுமீதான அதிருப்தியை மக்கள் தம்மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம சம்பத் பங்கேற்ற நிகழ்வொன்றின்போது, அவர்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் வீடும் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையிலேயே ஆளுங்கட்சியின் நிகழ்வுகளை தவிர்த்து வருகின்றனர் என கூறப்படுகின்றது.