அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
கல்கிஸ, இரத்மலானை, கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
கடந்த நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
எதுஎவ்வாறு இருப்பினும் ஊரடங்கு உத்தரவினையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.