உக்ரைனின் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும், சில ஏவுகணைகளை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் உட்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், 3 எண்ணெய் கிடங்குகளையும் ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. இவற்றில் இருந்துதான் மைக்கோலெய்வ் நகரில் உள்ள உக்ரைன் இராணுவத்துக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் போர் தொடங்கியதில் இதுவரை 3,455 பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 1,400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட காயம் அடைந்தவர்கள் அடங்குவர்.