ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார்.
98 சதவீத வாக்குகளின் முடிவில், அவரது வலதுசாரி ஃபிடெஸ் கட்சி 53.1 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
பீட்டர் மார்கி ஸே தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 35 சதவீத வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.
விக்டர் ஓர்பன், தனது வெற்றி உரையில், பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்தையும் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் விமர்சித்தார். அவர்களை எதிரிகள் என்று அழைத்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகுதியில் தலைநகர் புடாபெஸ்டில் உற்சாகமான ஆதரவாளர்களிடம் ஆர்பன் கூறுகையில், ‘இது மிகப்பெரிய வெற்றியாகும்’ என விபரித்தார்.
ஹங்கேரி உக்ரைனுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஏற்றுள்ளது. மக்களுக்கு உதவுவதன் மூலம், ஆனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க மறுப்பதன் மூலம், ஒர்பன் ஹங்கேரியை போரில் இருந்து விலக்கி வைக்கிறார்.
58 வயதான பிரதமர் விக்டர் ஓர்பனின் கொள்கைகளை வோலோடிமிர் ஸெலென்ஸ்கி பலமுறை விமர்சித்துள்ளார்.
ஹங்கேரியின் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் போது, இந்த வெற்றி 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓர்பனின் நான்காவது வெற்றியாகும்.
ஃபிடெஸ் கட்சிக்கு 135 இடங்கள் இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி 56 இடங்களைப் பெறும் என தேசிய தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.