புச்சா மற்றும் இர்பினில் அப்பாவி உக்ரைனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா நடத்திய இழிவான தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு இன்னும் கூடுதலான சான்றுகள் என்று பிரதமர் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தோல்வியுற்ற படையெடுப்பிற்கு மத்தியில் அவர் அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும், பிரித்தானியா பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ ஆதரவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 20பேரின் இறந்த உடல்களை காட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா மறுத்துள்ளது.
உக்ரைன், தனது தலைநகரான தலைநகர் கீவ்வைச் சுற்றியுள்ள பகுதி முழுவதையும் தங்கள் படைகள் மீட்டுள்ளதாகக் கூறுகிறது.