ஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் 12பேரில் ஒருவருக்கு கொவிட் இருந்தது மற்றும் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
கடைகள், வேறு சில உட்புற அமைப்புகள் மற்றும் பொது போக்குவரத்துக்கான கொவிட் முகக்கவச சட்டங்கள் இரண்டு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஸ்கொட்லாந்து அரசாங்கம், இந்த வழிகாட்டுதல் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகும் நடைமுறையில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.
மேல்நிலைப் பாடசாலை வகுப்புகள் மற்றும் கட்டிடங்களுக்குள் நடமாடுபவர்களும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என விதியை கட்டாயப்படுத்தியுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம், மார்ச் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஸ்கொட்லாந்தில் 451,200 பேருக்கு கொவிட் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 473,800ஆகக் குறைந்துள்ளது.
கொவிட் பரவுவதைக் குறைக்க, உடல் ரீதியான தூரம் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வணிகங்களுக்கான சட்டப்பூர்வ தேவை மார்ச் 21ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
பிரித்தானியாவின் மற்ற பகுதிகளில் முகக்கவசம் சட்டப்பூர்வமாக தேவையில்லை.