ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் அரசாங்கக் கூட்டு முன்னணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.