இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
நேற்றைய தினம் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ.காவின் திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
மலையக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இ.தொ.கா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி சர்வ கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இ.தொ.காவும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.