அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இருக்க கூடாது என்ற முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன முன்வைத்துள்ளார்.
வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கூட கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அமைச்சரவையில் மட்டும் ஏன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என எரான் விக்ரமரத்ன கேள்வியெழுப்பினார்.
இன்று இடம்பெறும் விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நம்பிக்கை இல்லை, ஸ்திரத்தன்மை இல்லை என்றால் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைக்கு முன்வராது என கூறினார்.
இதேவேளை தாம் தேசிய அரசாங்கத்தில் இணைய வேண்டுமென விரும்பினால், முதலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை எதிர்க்கட்சி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.