நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பணக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதம் மாற்றமின்றி 4 விழுக்காடாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதமும் மாற்றமின்றி மூன்றரை விழுக்காடாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.