ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இணைந்து பேசிய பிரித்தானிய பிரதமர், கிராமடோர்ஸ்க் நிலையத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா தண்டனையிலிருந்து தப்பாது என்று எச்சரித்தார்.
மேலும், வீடுகளை விட்டு வெளியேறும் அகதிகள் மீது மனசாட்சியின்றி குண்டுவீச்சு உட்பட கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்தில் பிரித்தானியாவும் ஜேர்மனியும் ஒரேவிதமான திகில் மற்றும் வெறுப்பை பகிர்ந்து கொள்கின்றன என்பதை நான் அறிவேன்.
பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றமாகும். மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் கவனிக்கப்படாமல் அல்லது தண்டிக்கப்படாமல் போகாது’ என கூறினார்.