ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இதற்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்தோடு, நாட்டின் தற்போது இடம்பெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.