ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமானதல்ல என்றும் முழு ஐரோப்பாவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய எரிசக்தி பொருட்கள் மீது முழுமையான தடை விதிக்கவும், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை வழங்கவும் மேற்குலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்து வருவதால், கடுமையான போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.
இது ஒரு கடினமான போராக இருக்கும் என்றும் இதில் தங்கள் வெற்றியை நம்புவதாகவும் தெரிவித்த அவர், இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இராஜதந்திர வழிகளைத் தேடுவதாகவும் தெரிவித்தார்.
கிழக்கில் ரஷ்யா தோற்கடிக்கப்படும் வரை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சந்திக்க மாட்டார்கள் என உக்ரேனிய பேச்சாளர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.