ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடத்தையால் தான் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளதாக இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு புட்டினை அறிந்திருந்ததாகவும் அவர் எப்போதும் ஒரு ஜனநாயக வாதியாகவும் அமைதியான மனிதராகவும் தனக்கு தெரிந்தார் என்றும் 85 வயதான இத்தாலியின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
1994 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கு இடையில் மூன்று முறை இத்தாலிய அரசாங்கத்தின் தலைவராக இருந்த பெர்லுஸ்கோனி, முன்னதாக புடினை பகிரங்கமாக விமர்சிப்பதைத் தவிருந்திருந்தார்.
இருப்பினும் தற்போது, பொதுமக்கள் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றின் பயங்கரத்தை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, அதன் பொறுப்புகளை மறுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.