அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பொதுத் தேர்தலை மே 21ஆம் திகதி நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
தலைநகர் கான்பெராவில் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொரிசனின் ஆளும் கூட்டணி பிரதிநிதிகள் சபையில் 76 இடங்களைக் கொண்டுள்ள நிலையில் அது அதிகாரத்தை தக்கவைக்க போதுமானது அல்ல.
அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பதவியேற்கும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த தேர்தலில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில், ஸ்கொட் மொரிசன் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.