நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCD வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் DEF வலயங்களுக்கு இன்று காலை 10.45 முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.
மேலும் GHI வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் 3.15 மணி வரையிலும் JKL வலயங்களுக்கு 3.15 முதல் 5.30 மணி வரையிலும் EFGH வலயங்களுக்கு இரவு 7.15 முதல் 9 மணி வரையிலும் IGKL வலயங்களில் இரவு 9 மணி முதல் 10.45 மணி வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.