ஐ.பி.எல். ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் படிக்கல் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் கிருஸ்ணப்பா கௌதம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அவிஷ்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியால், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 39 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் பிரசீத் கிருஸ்ணா மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயனாக, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.