பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.