24 ரஷ்ய தூதரக ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா கூறியுள்ளது.
அந்த 24 பேரில் 18 தூதரக அதிகாரிகளும் அடங்குவர். மேலும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இதேபோன்ற நகர்வுகளைத் தொடர்ந்து குரேஷிய வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
உக்ரைன் மீதான மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் (அங்கு) செய்யப்பட்ட பல குற்றங்கள் மீதான எதிர்ப்பில் ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜாக்ரெப்பில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் நிர்வாக தொழில்நுட்ப ஊழியர்களைக் குறைப்பது குறித்து ரஷ்ய கட்சிக்கு தெரிவிக்கப்பட்டது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவாவை மேற்கோள் காட்டி, இதற்கு ரஷ்யா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிலக்கரி இறக்குமதி மீதான தடை, வர்த்தகத்தில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கிரெம்ளினுக்கு நெருக்கமான பல தன்னலக்குழுக்களின் தடுப்புப்பட்டியலில் உள்ளடங்கிய உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை புதிய பொருளாதார தடைகளை ஏற்றுக்கொண்டது.