ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து தெற்கு துறைமுகத்தில் குறைந்தது 10 ஆயிரம் பொதுமக்கள் இறந்துள்ளனர் என மரியுபோல் நகர முதலவர் தெரிவித்துள்ளார்.
மரியுபோலில் இன்னும் 120,000 பொதுமக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இறந்தவர்களின் உடல்களை சேகரித்து வணிக வளாகங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் ரஷ்ய இராணுவம் வைக்கின்றது என்ற குறைபாடுகளும் கிடைத்துள்ளதாக கூறினார்.


















