பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி நீட்டிப்பு சட்டப்பூர்வமானது என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
அவரது பதவி நீடிப்பு செல்லுபடியானது அல்ல என தெரிவித்து செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் செல்லுபடியாகும் என்றும், அது 2021 டிசம்பர் 31, முதல் அமுலுக்கு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 23வது தளபதியாக சவேந்திர சில்வா, கடந்த 2019 ஓகஸ்ட் 17 அன்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.