ஜாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து இளைஞர்களும் அறிவுறுத்தல் விடுத்தார்.
சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு, வாசிப்பு மற்றும் பச்சாதாபம் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு அனைவரும் வெற்றிகரமான முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய வெங்கையா நாயுடு, ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.